விருதுநகரில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
"நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் பணப்பட்டுவாடா செய்து ஜனநாயக படுகொலையில் ஈடுபட்டுள்ளது.
இதனால் சட்டப்பேரவைத் தேர்தலை ரத்து செய்வதோடு, மே இரண்டாம் தேதி நடைபெற இருக்கும் வாக்கு எண்ணிக்கையையும் நடத்தக்கூடாது.
எனவே மறுபடியும் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும்" என ஆர்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில், புதிய தமிழக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வே.க.அய்யர் தலைமை தாங்கினார். சுமார் 50 க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.