ETV Bharat / state

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் கழுத்து அறுத்து படுகொலை

விருதுநகர்: சிவகாசி அருகே வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Murder of a young woman who was alone at home - Police investigation!

author img

By

Published : Aug 9, 2020, 12:11 PM IST

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேவுள்ள பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த பட்டாசு தொழிலாளியான செல்வ மணிகண்டன் என்பவரின் மனைவி பிரகதி மோகினி (24). இந்த தம்பதிக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், நேற்று (ஆக.08) பிரகதி மோகினி வீட்டில் தனியாக இருந்த நிலையில், அடையாளம் தெரியாத நபர்களால் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணவர் செல்வமணிகண்டன் வேலைக்கு சென்ற நிலையில், பிரகதி மோகினியின் வீட்டிலிருந்து அடையாளம் தெரியாத நபர் வெளியே வந்ததைக் கண்ட அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் வீட்டினுள் சென்று பார்த்தபோது, பிரகதி மோகினி இறந்து கிடந்துள்ளார்.

இதுகுறித்து அருகிலிருந்தவர்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவகாசி கிழக்கு காவல் நிலைய காவலர்கள், பிரகதியின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களின் உதவியோடு முதல்கட்ட விசாரணையை நடத்திவருகின்றனர். வீட்டில் உள்ள பீரோ திறந்த நிலையில் இருந்ததால், பணதிற்காக கொலை நடந்துள்ளதா அல்லது வேறு யாரேனும் கொலை செய்துவிட்டு பணத்திற்காக கொலை செய்யப்பட்டதுபோல் தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்களா என்கின்ற பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.