விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் எம்.ஆர். நகரைச் சேர்ந்தவர் சமுத்திரபாண்டி. இவர், ராஜபாளையம் அம்பலபுளி பஜார் பகுதியில் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தெற்கு காவல் நிலைய காவல் துறையினர், சமுத்திரபாண்டியனின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்னர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டதில், அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளத்துரை என்பவர் சமுத்திரபாண்டியின் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.
பின்னர் வெள்ளத்துரையை கைது செய்த காவல் துறையினர், அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர், அதில் இருவருக்கிடையே இடப்பிரச்னை இருந்ததாகவும் அதனால் தனியாக இருந்த சமுத்திரபாண்டியை கீழே தள்ளிவிட்டு கல்லைப் போட்டு கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்தார்.
இதையும் படிங்க: பெண் குழந்தை மர்ம மரணம்... தோட்டத்தில் அடக்கம்... சந்தேகத்தைக் கிளப்பிய விஏஓ