ETV Bharat / state

சிஏஏ விவகாரத்தில் ரஜினி டயலாக்கை சொல்லும் அமைச்சர்! - சிஏஏ விவகாரத்தில் ரஜினி டயலாக்கை சொல்லும் அமைச்சர்

விருதுநகர் : குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு பாதிப்பு வந்தால் முதல் ஆளாக தமிழ்நாடு முதலமைச்சர் தடுப்பார் என தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

Minister to tell Rajini Dialogue on CAA protest
சிஏஏ விவகாரத்தில் ரஜினி டயலாக்கை சொல்லும் அமைச்சர்!
author img

By

Published : Mar 2, 2020, 10:46 PM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திர பாலாஜி, “இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு குடியுரிமை திருத்தச் சட்டத்தால் எந்த ஒரு பாதிப்பும் வராது, அப்படியே பாதிப்பு வந்தால் முதல் ஆளாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதனை தடுப்பார். முதலமைச்சர் சொன்ன வாக்கை மீறமாட்டார்.

சிஏஏ விவகாரத்தில் ரஜினி டயலாக்கை சொல்லும் அமைச்சர்!

இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி அதிமுக கிடையாது. அதிமுக இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்ற இயக்கம். அரசியல் லாபத்திற்காக பொய்களைப் பரப்புரை செய்து இஸ்லாமியர்களை தூண்டி திமுகதான் தெருவில் இழுத்துவிட்டது.

கைக்குழந்தையுடன் இஸ்லாமிய பெண்கள் போராடுவதை பார்த்து தமிழ்நாடு முதலமைச்சர் வேதனைப்படுகிறார். இஸ்லாமியர்களை அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகள் மீது தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முன்னெடுக்கும்” என்றார்.

இதையும் படிங்க : ’திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிகள் காலி' - சத்திய பிரதா சாஹு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.