ETV Bharat / state

கரோனா நோயாளிகளுக்கான உணவை ருசித்து பார்த்த தங்கம் தென்னரசு - இராஜபாளையம்  மருத்துவமனைக்கு ஸ்ரீராம் பைனான்ஸ் உதவி

விருதுநகர்: திருச்சுழி அரசு மருத்துவமனையில் கரோனோ நோயாளிகளுக்கு தரமற்ற உணவு வழங்கப்பட்டதாக வந்த புகாரை அடுத்து அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டார்.

ஸ்ரீராம் பைனான்ஸ் உதவி
ஸ்ரீராம் பைனான்ஸ் உதவி
author img

By

Published : Jun 1, 2021, 10:08 AM IST

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அரசு மருத்துவமனையில் 21 கரோனோ நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தரமற்ற உணவு வழங்கப்பட்டதாக நேற்று சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று பரவியது.

திருச்சுழி அரசு மருத்துவமனையில் தங்கம் தென்னரசு ஆய்வு

கரோனா நோயாளிகளுக்கான உணவை ருசித்த அமைச்சர்:

இதனையடுத்து திருச்சுழி சட்டப்பேரவை உறுப்பினரும், தொழிற்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கரோனா நோயாளிகளுக்கு வழங்குவதற்காக சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவை ருசித்து பார்த்தார்.

ஸ்ரீராம் பைனான்ஸ் உதவி
ஸ்ரீராம் பைனான்ஸ் உதவி

அதை தொடர்ந்து உணவின் தரம் குறித்து வந்த குற்றச்சாட்டு குறித்து அலுவலர்களிடம் விளக்கம் கேட்டறிந்தார். மேலும், "கரோனா நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்குவதுதான் முதல் பணி. நோயாளிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதே அலுவலர்களின் தலையாய கடமை" என அலுவலர்களிடம் எச்சரிக்கையுடன் தெரிவித்தார்.

இராஜபாளையம் மருத்துவமனைக்கு ஸ்ரீராம் பைனான்ஸ் உதவி:

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் நாள்தோறும் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றனது. இந்நிலையில் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து ஸ்ரீராம் ஆட்டோ பைனான்ஸ் சார்பில் 70 ஆயிரம் மதிப்பிலான மூன்று ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: ஆனந்தையாவின் கரோனா மருந்துக்கு ஆந்திர அரசு அனுமதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.