விருதுநகரில் மே தினத்தை முன்னிட்டு தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கரோனா வைரஸ் தடை காலத்தில் ஏழை மக்கள் பாதிப்படையாமல் இருப்பதற்காக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு, மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளன. இதனையடுத்து பூரண மதுவிலக்கு குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுப்பார்” எனக் கூறினார்.
மேலும், ‘ஒன்றிணைவோம் வா’ என்ற பெயரில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆரம்பித்துள்ள தொலைபேசி எண்ணில் ஒரே நாளில் 6 லட்சம் மக்கள் உதவி கேட்டு தொடர்பு கொண்டுள்ளனர் என்பது ஜீபூம்பா வித்தையா என விமர்சித்த அவர் தான் அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது, தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க...கோயம்பேடு சந்தையில் வேலை பார்த்தவருக்கு கரோனா!