விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் புதிய கட்டடத்தின் அடிக்கல் நாட்டு விழா, புதிய பாடப்பிரிவு தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "வேலூரில் நடைபெற்றுவரும் மக்களவைத் தேர்தலில் எடப்பாடி அரசை மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதன் பிரதிபலிப்பு தேர்தல் முடிவில் தெரியும். ஸ்டாலின் எதைக் கண்டாலும் பயப்படுகிறார். அவரது நிழலைக் கண்டும் பயப்படுகிறார். வேலூர் தேர்தலில் பெறும் தோல்வியை எண்ணி உளறுகிறார்" என்றார்.
முதலமைச்சர் பொறுப்பில் இருப்பவர் பொறுமையாகத்தான் பேச வேண்டும் எனக் குறிப்பிட்ட ராஜேந்திர பாலாஜி, மத்திய அரசுடன் இணைக்கமாகச் சென்றால்தான் தமிழ்நாட்டிற்கு நல்லது என்றும் தெரிவித்தார். திமுகவினருக்கு தமிழர்கள், தமிழர்களின் உரிமை பற்றி பேசக்கூடிய உரிமை கிடையாது என்று சொன்ன அவர், கர்நாடகவில் ஆட்சியை கலைத்தது போல தமிழ்நாட்டில் எடப்பாடி ஆட்சியை ஸ்டாலின் தொட நினைத்தால் திமுக கட்சி இரண்டாக பிரியும் என எச்சரித்தார்.