விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஸ்டாலின் நமது நாட்டின் தலைவர் கிடையாது, அவர் ரஷ்யாவின் தலைவர். முதலமைச்சர் எதை செய்தாலும் ஸ்டாலின் எதிர்க்கிறார். வேளாண் திருத்த மசோதாவில் தவறு இருந்தால் கண்டிப்பாக முதலமைச்சர் எதிர்ப்பார்.
எதை செய்தாலும் மத்திய, மாநில அரசுகளை குறை சொல்லி பிழைப்பு நடத்தும் ஸ்டாலின் கனவு பலிக்காது. இரு மொழிக் கொள்கைதான் தமிழ்நாட்டின் நிலைப்பாடு. கூட்டணி வேறு, கொள்கை வேறு. கூட்டணியை விட்டுக் கொடுக்கலாம், ஆனால், கொள்கையை விட்டுக் கொடுக்க முடியாது.
கூட்டணி என்பது துண்டு போன்றது, கொள்கை என்பது வேஷ்டி போன்றது. நாங்கள் தேர்தலை சந்திக்க பயப்படவில்லை, தேர்தலை தைரியமாகச் சந்திப்போம். நாங்கள் செய்த திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூறி வெற்றி பெறுவோம், அம்மா ஆட்சி மீண்டும் அமையும்” என்றார்.
இதையும் படிங்க: 'வேளாண்மை திருத்த சட்டத்தை அதிமுக வரவேற்கிறது' - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்