ETV Bharat / state

கரோனா பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்படும் - அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் - அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்

அருப்புக்கோட்டையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

Minister KKSSR Ramachandran
அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்
author img

By

Published : May 15, 2021, 3:01 PM IST

விருதுநகர்: உயிரைப் பணயம் வைத்து பணி செய்கின்ற மருத்துவர்களையும், செவிலியர்களையும் நாம் உற்சாகப்படுத்த வேண்டும் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தலைமையில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அருப்புக்கோட்டை பகுதியில், கரோனா பரவுதல் குறித்தும், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்னர் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர் சந்திப்பு

அப்போது அவர் கூறியதாவது; 'விருதுநகரில் நாளை(மே 16) முதல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் வீடுகளில் வாசலில் அடையாள நோட்டீஸ் ஒட்டப்படும். இதனால் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் தேவையின்றி வெளியே சுற்றும் நிலை மாறும், தொற்று பரவுதல் கட்டுப்படுத்தப்படும்.

இதுவரை கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் உயிர் போகும் அபாயம் இல்லை எனத் தெரியவந்துள்ளது. எனவே, தடுப்பூசி செலுத்துவதைப் பார்த்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்.

தனியார் மருத்துவமனையில், கரோனா பாதிக்கப்பட்டவர்கள், சிகிச்சை அளிக்க முடியாமல் கைவிடப்பட்டவர்கள் மட்டுமே அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். அங்கிருந்து அரசு மருத்துவமனைக்கு வருபவர்கள் அதிகமாக உயிரிழக்கின்றனர்' எனத் தெரிவித்தார்.

மேலும் பேசிய அமைச்சர், 'மருத்துவர்களும், செவிலியர்களும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பணி செய்கின்றனர். அவர்களை நாம் உற்சாகப்படுத்த வேண்டும். கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலை அவர்கள் உறவினர்கள் தொடுவதற்கு அனுமதி அளிக்க வேண்டாம்.

அவர்களின் முகத்தை மட்டும் பார்க்க அனுமதி வழங்கி, அடக்கம் செய்வதை மாவட்ட நிர்வாகமே மேற்கொள்ள வேண்டும்' எனத் தெரிவித்தார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் மங்கல ராமசுப்பிரமணியன், சுகாதாரத்துறை அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: வார் ரூம் வாரியரான மு.க ஸ்டாலின்: சர்ப்ரைஸ் விசிட்டால் ஷாக்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.