விருதுநகர்: சென்னையை அடுத்த மாமல்லாபுரத்தில் நம்ம ஊரு நம்ம செஸ் என்கின்ற தலைப்பில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகின்ற ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசால் நடத்தப்படுகிறது. 44ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு விருதுநகரில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டி மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த போட்டியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அரசால் செஸ் போட்டிகள் மற்றும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதனை முன்னிட்டு இன்று (ஜூலை 18) விருதுநகரில் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், வேர்ல்ட் விஷன் ஆப் இந்தியா, மற்றும் நேரு யுவகேந்திரா இணைந்து மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டி விருதுநகர் அருகே அருப்புக்கோட்டை சாலையில் உள்ள தனியார் கல்லூரி முன்பு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த போட்டி விருதுநகர் அருகே அருப்புக்கோட்டை சாலை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாரியம்மன் கோயில் திடல், மெயின் பஜார், எம்.ஜி.ஆர் சிலை வழியாக சென்று விருதுநகர் டூ திருநெல்வேலி சாலையில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் முடிவுற்றது.
இதையும் படிங்க:உள்ளாடையை கழற்றச்சொல்லி நிர்பந்தித்த அலுவலர்கள் - நீட் தேர்வு எழுதச்சென்ற மாணவிகளுக்கு நேர்ந்த அவலம்!