ETV Bharat / state

இஸ்லாமியப் பெண்ணுக்கு ஜனாதிபதி மாளிகையில் பட்டமளிப்பு விழா நடத்த வேண்டும்! - விருதுநகர் பிரச்சாரத்தில் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர்

விருதுநகர்: பாண்டிசேரி இஸ்லாமியப் பெண்ணுக்கு ஜனாதிபதி மாளிகையில் பட்டமளிப்பு விழா நடத்தி, அவரை கெளரவப்படுத்த வேண்டும் என மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தினார்.

இஸ்லாமியப் பெண் குறித்து பேசிய மாணிக்கம் தாகூர்
இஸ்லாமியப் பெண் குறித்து பேசிய மாணிக்கம் தாகூர்
author img

By

Published : Dec 26, 2019, 8:26 AM IST

விருதுநகா் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலுக்கான முதல்கட்ட பரப்புரை நேற்று மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது. முதல்கட்டமாக 27ஆம் தேதி ராஜபாளையம், திருவில்லிப்புத்தூா், வத்திராயிருப்பு, வெம்பக்கோட்டை, சிவகாசி ஆகிய இடங்களில் தோ்தல் நடைபெற உள்ளது. முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலில் 10 மாவட்ட கவுன்சிலர், 103 ஒன்றிய கவுன்சிலர், 194 ஊராட்சி மன்ற தலைவர், 1554 ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு 1028 வாக்குச் சாவடிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இன்று விருதுநகா் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா் பதவிக்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளாரை ஆதரித்து விருதுநகா் மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா் பரப்புரை மேற்கொண்டார்.

இஸ்லாமியப் பெண் குறித்து பேசிய மாணிக்கம் தாகூர்

பின்னா், செய்தியாளா்களிடம் மாணிக்கம் தாகூா் கூறியதாவது;

உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக பணத்தை மட்டுமே நம்பி நிற்கிறது. திமுக கூட்டணி, மக்களின் உண்மையான பிரச்னைகளை நம்பி நிற்கின்றோம். மூன்று மாதத்தில் அதிமுக அமைச்சா்கள் சசிக்கலாவுக்கு 1600 கோடி ரூபாய் கப்பம் கட்டி உள்ளதாக வருமான வரித் துறையினா் கூறியுள்ளனர். இதன் மூலமே அதிமுகவினா் உள்ளாட்சித் தோ்தலில் பணத்தை மட்டுமே நம்பி இருப்பது தெரிகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணியினா் நடத்திய பேரணி என்பது மக்கள் பேரணி. அதில் கலவரம் வரும் என்று முதலில் கூறியது அதிமுக அமைச்சா் ஜெயக்குமார், ஹச்.ராஜா தான் ஆனால் அவா்கள் கூறியதை பொய்யாக்கி பேரணி அமைதியாக நடந்து முடிந்துள்ளது.

மேலும் பகுத்தறிவு, மொழிபற்று உடைய மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு விளங்குகிறது. ஆனால் , பாஜக குஜராத்தில் அரசியல் செய்வது போல் தமிழ்நாட்டிலும் அரசியல் நடத்த முயற்சி செய்கிறது. பாண்டிசேரியில் பட்டம் வழங்கும் விழாவில் இஸ்லாமிய பெண்ணுக்கு ஏற்பட்டது வன்மையாக கண்டிக்கக்கூடியது. அந்த மாணவியை மட்டும் ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து பட்டமளிப்பு விழா நடத்தி கெளரவப்படுத்தி, அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட அவமானத்தை போக்க வேண்டும் என்றார்.

இதையும் படிங்க: ' திமுக வலையில் சிக்காமல் கமல்ஹாசன் தப்பிவிட்டார் ' - ஆர்.பி.உதயகுமார்!

Intro:விருதுநகா்
25-12-19

பாண்டிச்சேரி இஸ்லாமியப் பெண்ணுக்கு ஜனாதிபதி மாளிகையில் பட்டமளிப்பு விழா நடத்த வேண்டும் - விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பேட்டி

Tn_vnr_04_manikyam_thaqur_byte_vis_script_7204885Body:பாண்டிசேரியில் பட்டம் வழங்கும் விழாவில் இஸ்லாமிய பெண்ணுக்கு ஏற்பட்டது வன்மையாக கண்டிக்கக்கூடியது அந்த மாணவியை ஜனாதிபதி மளிக்கைக்கு அழைத்து மீண்டும் அந்த மாணவிக்கு மட்டும் ஜனாதிபதி மாளிகையில் வைத்து பட்டமளிப்பு விழா நடத்தி கெளரவப்படுத்த வேண்டும்.

விருதுநகா் மாவட்டத்தில் முதல் கட்ட உள்ளாட்சி தோ்தலின் பிரச்சாரம் இன்று மாலை 5மணியுடன் நிறைவுபெற்றது. முதல் கட்டமாக 27ம் தேதி இராஜபாளையம் திருவில்லிப்புத்தூா் வத்திராயிருப்பு வெம்பக்கோட்டை மற்றும் சிவகாசி ஒன்றியங்களில் தோ்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தோ்தலில் 10 மாவட்ட கவுன்சிலா் 103 ஒன்றிய கவுன்சிலா் 194 ஊராட்சி மன்ற தலைவா் மற்றும் 1554 ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினா் பதவிகளுக்கு 1028 வாக்கு மையங்களில் தோ்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் இன்று விருதுநகா் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா் பதவிக்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளாரை ஆதரித்து விருதுநகா் பாராளுமன்ற உறுப்பினா் மாணிக்கம் தாகூா் பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய மாணிக்கம் தாகூா் நடைபெற உள்ள உள்ளாட்சி தோ்தலில் அதிமுக பணத்தை மட்டுமே நம்பி நிற்கிறது. அதே சமயம் திமுக கூட்டணி மக்களின் உண்மையான பிரச்சனைகளை நம்பி நிற்கின்றோம் எனக்கூறிய மாணிக்கம் தாகூா் மூன்று மாதத்தில் அதிமுக அமைச்சா்கள் சசிக்கலாவுக்கு 1600 கோடி கப்பம் கட்டி உள்ளனா் என்று வருமான வரித்துறையினா் கூறி உள்ளது இதன் மூலமே அதிமுகவினா் உள்ளாட்சி தோ்தலில் பணத்தை மட்டுமே நம்பி உள்ளது தெரியும் எனக் கூறினார். திமுக கூட்டணியினா் நடத்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்திய பேரணி என்பது அது மக்கள் பேரணி அதில் கலவரம் வரும் என்று முதலில் கூறியது அதிமுக அமைச்சா் ஜெயக்குமார் மற்றும் பாஜகவின் H.ராஜா தான் ஆனால் அவா்கள் கூறியதை பொய்யாக்கி பேரணி அமைதியாக நடந்து முடிந்து உள்ளது என்றார். மேலும் தமிழகத்தில் தான் பகுத்தறிவு மற்றும் மொழிபற்று உடைய மாநிலங்களில் ஒன்றாக தமிழம் உள்ளது. ஆனால் பாஜக குஜராத்தில் அரசியல் செய்வது போல் தமிழகத்திலும் அரசியல் நடத்த முயற்சி செய்கிறது என்றார். மேலும் பாண்டிசேரியில் பட்டம் வழங்கும் விழாவில் இஸ்லாமிய பெண்ணுக்கு ஏற்பட்டது வன்மையாக கண்டிக்கக்கூடியது அந்த மாணவியை ஜனாதிபதி மளிக்கைக்கு அழைத்து மீண்டும் அந்த மாணவிக்கு மட்டும் ஜனாதிபதி மாளிகையில் வைத்து பட்டமளிப்பு விழா நடத்தி கெளரவப்படுத்தி அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட அவமானத்தை போக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இது போன்று சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.