ETV Bharat / state

நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் - மாணிக்கம் தாகூர் - நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும்

நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் எனவும்; பிரதமர் மோடி திருக்குறள் சொல்லி தமிழ்நாடு மக்களை ஏமாற்ற முடியாது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும்
நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும்
author img

By

Published : Jan 17, 2022, 9:52 PM IST

விருதுநகர்: கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே படந்தால் சந்திப்பில் மேம்பாலம் பணிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விருதுநகர் மக்களின் கோரிக்கையான மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்த ஒன்றிய, மாநில அரசுகளுக்கு நன்றி.

இதற்கு பெருந்தலைவர் காமராஜரின் பெயர் சூட்ட வேண்டும். அதிமுக கட்சியை பொறுத்தமட்டில் சேலத்திலும், தேனியிலும் என இரண்டு இடங்களில் மட்டும் இருக்கும் கட்சியாக மாறிவிட்டது.

நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும்

மக்கள் தொகை கணக்கெடுப்பு

இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்று முடிந்து 2026இல் தான் மறுசீரமைப்பு முடியும்.

கடந்த பட்ஜெட்டுகளில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுமக்களுக்குப் பயனில்லாத வெறும் பட்ஜெட்டாக அறிவித்தார்.

இந்த ஆண்டு நடைபெற உள்ள பட்ஜெட் தொடரிலாவது ஏழை, எளிய மக்களுக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் பயனளிக்கக்கூடிய வகையில், பட்ஜெட்டை வழங்குவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்.

நீட் தேர்வு ரத்து

நீட் தேர்வை பொறுத்தமட்டில், பாஜகவைத் தவிர அனைத்துக் கட்சிகளும் ஒரு மனதாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற ஒற்றுமையுடன் இருக்கிறோம். சட்டப்பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்ட மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் முறையாக செயல்படுத்த வேண்டும்.

மோடியின் திருக்குறள் அரசியல்

ஆனால், தமிழ்நாட்டை ஒன்றிய அரசு பாராமுகமாகவே பார்த்து வருகிறது. இதனை திருத்திக் கொண்டு தமிழர்களுடைய எண்ணங்களை, கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசாக மாற வேண்டும். பிரதமர் மோடி திருக்குறள் சொல்லி தமிழ்நாடு மக்களை ஏமாற்ற முடியாது.

கர்நாடக அலுவலர் அண்ணாமலை

பாஜக தலைவர் அண்ணாமலை குழந்தைகளின் நகைச்சுவையை உணர்ந்து கொள்ளக்கூட முடியாத கர்நாடக அலுவலராகவே இன்னும் இருந்து வருகிறார்.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்பட தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனையை அனுபவித்தே ஆகவேண்டும். ராஜேந்திர பாலாஜியை ஆதரித்து யார் குறிப்பிட்டாலும் அவர்களும் ஊழல்வாதிகளாகவே கருதப்படுவார்கள்" என்றார்.

இதையும் படிங்க: குளிர் காலத்தில் சருமம் ஜொலிக்க வேண்டுமா...? இது மட்டும் போதும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.