விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணனிடம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட மையங்களுக்கு தெர்மல் ஸ்கேனர் ஆகியவை வாங்க, ரூ.26 லட்சம் நிதி ஆணையை மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "மாவட்டத்தில் 18 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் 17 லட்சம் பேர் உள்ளனர். அவர்களில் 2 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு முதற்கட்ட தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மீதமுள்ள சுமார் 14 லட்சம் பேருக்குத் தேவையான தடுப்பூசியை ஒன்றிய அரசு விரைந்து அனுப்ப வேண்டும்.
மாநில அரசுகளுக்கு தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என அறிவித்த மோடி, அந்த தடுப்பூசி எங்கு இருந்து வரவழைக்கப்படும் எனத் தெரிவிக்கவில்லை.
இந்த கரோனா காலத்தைப் பயன்படுத்தி பெரும் பணக்காரர்களுக்கு லாபத்தை சேர்ப்பதற்கு பிரதமர் முயற்சி செய்கிறார். மோடி அரசின் கொள்கைகள் அனைத்தும் பெரும் பணக்காரர்களுக்கு உதவும் வகையில் தான் உருவாக்கப்பட்டு உள்ளது. ஆகவே, மோடி அரசின் திட்டங்கள் பணக்காரர்களுக்கு மட்டுமே" என்றார்.
இதையும் படிங்க: 44 கோடி கரோனா தடுப்பூசிகள் வாங்க ஆர்டர்: ஒன்றிய அரசு உத்தரவு