ETV Bharat / state

'அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிமுகவை விரைவில் பாஜகவுடன் இணைத்து விடுவார்' - மாணிக்கம் தாகூர்!

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விரைவில் அதிமுகவை பாஜகவுடன் இணைத்து விடுவார் என விருதுநகர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

manikam_thaqur
manikam_thaqur
author img

By

Published : Oct 27, 2020, 8:02 AM IST

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் காங்கிரஸ் கட்சி மேற்கு மாவட்ட தலைவர் தளவாய்பாண்டியன் மகள் திருமண விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற விருதுநகர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், " ஓபிசி மருத்துவ இட ஒதுக்கீடு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு மிகவும் வருத்தமளிக்கிறது. இதை எதிர்த்து மாநில அரசும், மத்திய அரசும் மேல் முறையீடு செய்ய வேண்டும்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விரைவில் அதிமுகவை பிஜேபியுடன் இணைத்து விடுவார். அதற்கான வேலையைதான் தற்போது பார்த்து வருகிறார். ராஜேந்திர பாலாஜியை பொறுத்தளவில் பிஜேபியின் ஒரு ஆளாகத்தான் இருக்கிறார். அவர்தான் மோடியை முதலில் "டாடி" என்று அழைத்தவர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளிலும் அதிமுக படுதோல்வி அடைய போகிறது. அதற்கு முழு காரணமாக இருப்பவர் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. அவர் ரவுடிகளை வைத்து அரசியல் செய்கிறார். மக்களுக்கு எந்த நல்லதையும் செய்யாமல் இருப்பதன் விளைவாக அதிமுக படுதோல்வி அடையும்" என்றார்.

இதையும் படிங்க:கொலை மிரட்டல் விடுக்கும் அமைச்சர்- கட்சிக் கூட்டத்தில் போட்டுடைத்த எம்எல்ஏ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.