ETV Bharat / state

தண்டவாளத்தைக் கடக்க ரயிலின் மேற்கூரை மீது ஏறிய நபருக்கு நேர்ந்த சோகம்! - man tires to cross railway gate died at virudhunagar

விருதுநகர்: சரக்கு ரயில் மீது ஏறி தண்டவாளத்தை கடக்க முயன்ற அடையாளம் தெரியாத நபர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மின்சாரம்
மின்சாரம்
author img

By

Published : Jan 26, 2020, 6:24 PM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஆர்.ஆர். நகா் பகுதியில் துலுக்கப்பட்டி ரயில் நிலையம் உள்ளது. இந்நிலையில், தூத்துக்குடியிலிருந்து புனலூர் வரை நிலக்கரி ஏற்றிச்செல்லும் சரக்கு ரயிலானது சிக்கலுக்காக துலுக்கப்பட்டி ரயில் நிலையம் அருகில் நின்றுள்ளது. இதனால், அப்பகுதியில் ரயில்வே கேட் போடப்பட்டிருந்தது.

அப்போது, ரயில்வே கேட்டை தாண்ட முயன்ற அப்பகுதி மக்கள் ரயில் மீது ஏறி கடந்துள்ளனர். அவர்களைப் போல், அடையாளம் தெரியாக நபர் ஒருவர், ரயிலின் கூரை மீது ஏறியபோது ரயில் புறப்பட்டுள்ளது. இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த நபர், உடனடியாக ரயிலிலிருந்து குதிக்க முயன்றார்.

அப்போது, மின்சாரம் தாக்கி உடல் கருகி சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தால் ரயில் அதே பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டது. இதனால் மதுரை, நெல்லை மார்க்கத்தில் செல்லும் அனைத்தும் ரயில்களுக்கு சமிக்ஞை (சிக்னல்) கிடைக்காமல் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டதில் சுமார் 1 மணி நேரத்திற்கு ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

தண்டவாளத்தைக் கடக்க ரயில் மீது ஏறிய நபர்

இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: சிறுத்தை தாக்கி 4 ஆடுகள் உயிரிழப்பு!

Intro:விருதுநகர்
26-01-2020

சரக்கு ரயில் மீது ஏறி தண்டவாளத்தை கடக்க முயன்ற அடையாளம் தெரியாத நபா் மீது மின்சாரம் பாய்ந்து பலி

Tn_vnr_06_unknown_death_vis_script_7204885Body:விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே துலுக்கப்பட்டி ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் மீது ஏறி தண்டவாளத்தை கடக்க முயன்ற அடையாளம் தெரியாத நபா் மீது மின்சாரம் பாய்ந்து பலி. இந்த விபத்தால் மதுரை நெல்லை மார்க்கத்தில் ரயில் சேவை 1 மணி நேரத்திற்க்கு மேலாக பாதிப்பு..

விருதுநகா் மாவட்டம் சாத்தூர் அருகே ஆர்.ஆர்.நகா் பகுதியில் துலுக்கபட்டி ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் இன்று தூத்துக்குடியில் இருந்து புனலூர் வரை நிலக்கரி ஏற்றி செல்லும் சரக்கு ரயில் துலுக்கப்பட்டி ரயில் நிலையத்தை சிக்கலுக்கான நின்று உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள ரயில்வே கேட் அடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் நிலக்கரி ஏற்றி வந்த ரயில் மீது ஏறி ரயில்வே தண்டவாளத்தை கடந்து உள்ளனா். அப்போது அடையாளம் தெரியாத நபா் ரயில் மீது ஏறி தண்டவாளத்தை கடந்த போது ரயில் கிளம்பி உள்ளது. இதனால் அந்த நபா் ரயிலில் இருந்து குதிக்க முற்பட்ட போது மின்சாரம் தாக்கி உடல் கருகி சம்பவ இடத்தில் பரிதாபாமாக உயிர் இழந்தார். இதனால் ரயில் சிறிது தூரம் ஓடி நின்றதால் சிக்கனல் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. இதனால் மதுரை நெல்லை மார்க்கத்தில் செல்லும் அனைத்தும் ரயில்களுக்கு சிக்னல் கிடைக்காமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டது. இனதால் சுமார் 1 மணி நேரத்திறக்கு ரயில் சேவை பாதிக்கபட்டது. பின்னா் சம்பவ இடத்திற்க்கு வந்த ரயில்வே போலீசார் உடலை மீட்டு அடையாளம் தெரியாத நபா் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.