விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் வசித்து வரும் 14 வயது மாணவி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தையை இழந்த நிலையில், தாயுடன் வசித்து வருகிறார். இவரது தாய் தீப்பெட்டித் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். தற்போது மாணவி அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த ஓராண்டுக்கும் மேல் கரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் மூலமாக வீட்டில் இருந்தபடியே மாணவி தற்போது கல்வி பயின்று வருகிறார். அவரது தாயார் தீப்பெட்டி தொழிற்சாலை பணிக்குச் சென்றபோது மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அம்மாணவியின் சித்தப்பா ராமர் (29) தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, தினந்தோறும் அங்கு வந்து சென்றதாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து ராமர் அம்மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த நிலையில், அம்மாணவி கர்ப்பமாகியுள்ளார். மேலும், “நான் உனது சித்தியுடன் வாழ மாட்டேன், உனது தாயாரை கேவலப்படுத்தி விடுவேன்” என சிறுமியை மிரட்டி தொடர்ந்து ஓராண்டாக சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் மாணவி கர்ப்பமான விஷயம் வீட்டிற்க்கு தெரிவந்ததையடுத்து, இது குறித்து அம்மாணவியிடம் அவரது தாய் மற்றும் சித்தி கேட்டபோது, தான் கர்ப்பம் ஆனதற்கு காரணம் சித்தப்பா ராமர் என்று சிறுமி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்ததுள்ளது.
இச்சம்பவம் குறித்து திருத்தங்கல் அரசு மருத்துவமனை சார்பாக சிவகாசியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் அங்கு சென்ற மகளிர் காவல் துறையினர், ராமரைக் கைது செய்து, போக்சோ நீதிமன்றம் முன் நிறுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: இந்தியாவில் கரோனா தடுப்பூசியின் பெயர் 'இல்லை' - நடிகர் சித்தார்த் பளிச்!