ETV Bharat / state

தங்கையின் திருமண வாழ்க்கைக்கு இடையூறு: முன்னாள் காதலனை கொலை செய்த அண்ணன் - virudhunagar crime news

விருதுநகர்: தங்கையின் திருமண வாழ்க்கைக்கு இடையூறாக இருந்த முன்னாள் காதலனை, அவரது சகோதரர் வெட்டிப்படுகொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

man  killed his sister ex-boyfriend in virudhunagar

author img

By

Published : Nov 16, 2020, 11:00 AM IST

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது தங்கை அதே பகுதியை சேர்ந்த ரவி என்பவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இதை செந்தில்குமார் தொடர்ந்து கண்டித்துள்ளார். இதற்கிடையில் செந்திலின் தங்கை அதே பகுதியைச் சேர்ந்த மற்றொருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில், முன்னாள் காதலன் மீண்டும் அந்தப் பெண்ணிடம் நெருங்கிப் பழக ஆரம்பித்து தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதற்கு அந்தப் பெண் எதிர்ப்பு தெரிவித்தும் பலமுறை பாலியல் தொந்தரவு அளித்து வந்ததாக செந்தில் குமாரிடம் தெரிவித்தார். இதையடுத்து செந்தில்குமார் கடைக்கு அருகில் நின்றிருந்த ரவியை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த சேத்தூர் காவல்துறையினர், ரவிகுமாரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ராஜபாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நாகசங்கர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார். மேலும், தலை மறைவாகியுள்ள செந்தில் குமாரைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: பெண்ணின் மீது ஆசிட், பெட்ரோல் ஊற்றி உயிருடன் கொன்ற நபர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.