விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள ரெங்கபாளையத்தைச் சேர்ந்தவர்கள் கார்த்திகை செல்வம் - சித்ரா தம்பதியினர். இருவரும் கடந்த 6 மாதங்களாக கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்துள்ளனர்.
இந்நிலையில், ரெங்கபாளையத்தில் உள்ள பிள்ளையார் கோயில் அருகில், கார்த்திகை செல்வனுக்கும் சித்ராவின் சகோதரர் முருகேசனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் இந்த வாக்குவாதம் கை கலப்பாக மாறி மதுபோதையில் இருந்த கார்த்திகை செல்வம், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகேசனின் மார்பில் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வத்திராயிருப்பு காவல்துறையினர், முருகேசனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், தலைமறைவான கார்த்திகை செல்வனை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: தொடர்ந்து பெண்களிடம் கைவரிசை காட்டிய 2 கொள்ளையர்கள் கைது!