விருதுநகர் அரசு உதவி பெறும் பள்ளியில் மாவட்ட ஹாக்கி அசோசியேஷன் சார்பில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான மாநில அளவிலான ஹாக்கி போட்டி ஜனவரி 18ஆம் தேதி தொடங்கியது.
இந்தப் போட்டியில் கோவை, சிவகங்கை, மதுரை, தேனி, சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 31 அணிகள் கலந்துகொண்டன. போட்டிகள் நாக்அவுட் முறையில் நடைபெற்றன.
இப்போட்டியின் கடைசி நாளான இன்று மதுரை, விருதுநகர் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் மதுரை அணி விருதுநகர் அணியை 1 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. பின்னர் வெற்றி பெற்ற மதுரை அணியின் வீரர்களுக்கு கோப்பையையும், சான்றிதழ்களையும் மாவட்ட ஹாக்கி அசோசியேஷன் நிர்வாகிகள் வழங்கினர்.
இதையும் படிங்க: வாலிபால் நாயகன் வினித்திற்கு பாராட்டு விழா!