ETV Bharat / state

விருதுநகரில் லாரி கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி - தேசிய நெடுஞ்சாலை விபத்து

விருதுநகர்: மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் தறிகெட்டு ஓடிய சிறிய ரக சுமையுந்து (லாரி) கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், வண்டியிலிருந்த உதவியாளர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

கட்டுப்பாட்டை இழந்து ஓடிய லாரி கவிழ்ந்து விபத்து
author img

By

Published : Jun 20, 2019, 11:03 AM IST

மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், காங்கேயத்திலிருந்து திருநெல்வேலிக்கு எண்ணெய் ஏற்றிச் சென்ற சிறிய ரக சுமையுந்து, கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு சாலையில் ஓடியது. மேலும், நெடுஞ்சாலையில் உள்ள தடுப்புகளை உடைத்துக் கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் கவிழ்ந்தது.

கட்டுப்பாட்டை இழந்து ஓடிய லாரி கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி

விபத்து குறித்துத் தகவலறிந்த சூலக்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் வேல்முருகன், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 108 அவசர ஊர்தி மூலம் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே வாகன உதவியாளர் விக்னேஸ்வரன் (22) உயிரிழந்தார். அவரின் உடல் விருதுநகர் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காகக் கொண்டு சென்றனர்.

மேலும் வாகன ஒட்டுநரான இளங்கோ (29) படுகாயங்களுடன் மதுரை தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். விபத்து குறித்து சூலக்கரை காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.

Intro:விருதுநகர்
20-06-19

சாலை விபத்தில் ஒருவர் பலி ஒருவர் படுகாயம்

Body:மதுரை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்
காங்கேயத்தில் இருந்து திருநெல்வேலிக்கு ஆயில் கொண்டு சொல்லும் சிறிய ரக லாரி கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலை தடுப்புகளை உடைத்து கொண்டு விபத்துக் உள்ளாகி கவிழ்ந்தது. விபத்தை அறிந்த சூலக்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் வேல்முருகன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே வாகன உதவியாளர் விக்னேஸ்வரன் (22) உயிரிழந்தார். அவரை விருதுநகர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றுள்ளனர். மேலும் வாகன ஒட்டுநர் இளங்கோ (29) படுகாயம் அடைந்தார் படுகாயமடைந்த இளங்கோவை மதுரை தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிக்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் விபத்து குறித்து சூலக்கரை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.