ETV Bharat / state

வருமானம் பாதிப்பு; திருமணமாகாத  விரத்தி - லாரி உரிமையாளர் தற்கொலை

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே லாரிக்கு தவணை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு மன உளைச்சலில் இருந்த லாரி உரிமையாளர் தற்கொலையால் உயிரிழந்தார்.

author img

By

Published : Aug 20, 2020, 8:32 PM IST

தற்கொலை செய்து கொண்ட பரமேஸ்வரன்
தற்கொலை செய்து கொண்ட பரமேஸ்வரன்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன் (39). திருமணமாகாத இவர் சொந்தமாக சரக்கு லாரி வைத்துள்ளார்.

கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில தினங்களாக போதுமான வருமானம் இல்லாததால் லாரிக்கு தவணை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு மன உளைச்சலில் இருந்ததாகவும், திருமணம் ஆகாத விரக்தியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இவர் தற்கொலையால் உயிரிழந்தார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பரமேஸ்வரன் தற்கொலைக்கு முன் தனது கைப்பட எழுதிய கடிதத்தை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். அந்தக் கடிதத்தில், எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனது இருசக்கர வாகனத்தை எனது அண்ணனிடம் ஒப்படைத்து விடுங்கள் என எழுதியுள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் பரமேஸ்வரனின் தற்கொலைக்கான காரணம் குறித்து உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல..

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ கீழே உள்ள 24 மணி நேர தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு மையம் - 044- 2464 0050, மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.