விருதுநகர் மாவட்டம், சாத்தூரிலுள்ள ரயில் நிலையத்தில் இன்று (ஜூன் 09) காலை மங்களூரு விரைவு ரயிலில் இருந்து இரண்டு பேர் இறங்கியுள்ளனர்.
அவர்களைக் கண்ட ரோந்துப் பணியிலிருந்து காவல் துறையினர், சந்தேகத்தின் பேரில் அவர்களை சோதனையிட்டனர். அப்போது அவர்கள் கர்நாடக மாநிலத்திலிருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் அவர்கள் சாத்தூர் அருகேயுள்ள நத்தத்துப்பட்டியைச் சேர்ந்த பால்பாண்டி, முருகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களைக் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்த 90 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.