விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலானது 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோயிலாகும். அர்சுனா நதி, வைப்பாறு இணையுமிடத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் ஆடி, தை, மார்கழி மாதங்கள் விசேஷ மாதங்களாக கெண்டாடப்படும். அதன்படி, தை மாத கடைசி வெள்ளியான இன்றைய நாள் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகங்களும் நடைபெற்றன.
ஆயிரக்கணக்காண பக்தர்கள் இத்திருவிழாவில் கலந்துகொண்டு மாரியம்மனுக்கு அக்னிசட்டி, ஆயிரம் கண் பானை, பொங்கல், முடி காணிக்கை உள்ளிட்ட நேர்த்தி கடன்களை செலுத்தினர். மேலும், இந்த திருவிழாவிற்காக விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டிருந்தன. பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதையும் படிங்க: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் கோயில் பிரதோஷ விழா கொண்டாட்டம்