விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மாரனேரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காக்கிவாடன்பட்டியில் ராஜு என்பவருக்குச் சொந்தமாக கிருஷ்ணசாமி பட்டாசு ஆலை உள்ளது.
இங்கு ஏற்பட்ட வெடி விபத்தில் அறை ஒன்று தரைமட்டமானது. இதில் காயமடைந்த ஒருவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து ஏற்பட்ட பகுதிக்கு விரைந்த காவல்துறையினர், சம்பவ இடத்தில் ஆய்வு செய்துவருகின்றனர்.
இதையும் படிங்க... விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து - பலி எண்ணிக்கை 19ஆக உயர்வு