ETV Bharat / state

’அதிகத் தொகை வசூலிக்கும் ஆம்புலன்ஸ்கள் மீது நடவடிக்கை’ அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் எச்சரிக்கை! - விருதுநகர் அண்மைச் செய்திகள்

விருதுநகர்: அதிக தொகை வசூலிக்கும் ஆம்புலன்ஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

கரோனா பரவல் தடுப்பு பணி குறித்த ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்.

author img

By

Published : May 21, 2021, 7:29 AM IST

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மேற்கொண்டு வரும் கரோனா பரவல் தடுப்பு பணி குறித்து சுகாதாரத் துறை அலுவலர்களுடன் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.

ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, “கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பே மிக முக்கியம். முகக்கவசம் அணியாமல், அத்தியாவசியம் இன்றி வெளியே வருகின்றனர். கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்போது மனது கஷ்டமாகதான் இருக்கிறது. ஆனால், பரவலை தடுக்க வேறு வழி இல்லை.

முதல் அலையின் பாதிப்பில் ஆக்ஸிஜன் தேவை இல்லாமல் இருந்தது. தற்போது நிலைமை அப்படி இல்லை. பொதுமக்கள் அதனை உணர்ந்து செயல்பட வேண்டும். நோயின் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து முதலமைச்சரே முடிவெடுப்பார்.

வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்.

கிராமங்களில் தடுப்பூசி போடுவதன் அவசியத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். நடிகர்கள், நடிகைகள் என அனைவரும் தடுப்பூசி போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். தடுப்பூசியால் எந்த பாதிப்பும் இல்லை.

ஒரு நடிகர் இறந்துவிட்டார் என்பதற்காக தடுப்பூசி போடாமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம்? அவருக்கு வேறு ஏதாவது நோய் இருந்திருக்கும். விலை மதிக்க முடியாத உயிரைப் பாதுகாக்க தடுப்பூசி போட வேண்டும்.

தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை. அதிக தொகை வசூலிக்கும் தனியார் ஆம்புலன்ஸ்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இதையும் படிங்க : 'நல்லாட்சிக்கான முதல்படி' - ஸ்டாலினை பாராட்டிய ஜக்கி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.