விருதுநகர் மாவட்டம், தர்மம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பய்யா(70). இவரது வீட்டிற்கு அதே பகுதியை சேர்ந்த தாய் - தந்தையை இழந்த 15 வயது சிறுமி ஒருவர் அடிக்கடி டிவி பார்க்க வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கருப்பய்யா சிறுமியை பலமுறை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று அந்த சிறுமிக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, சிறுமியை அவரது உறவினர், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஐந்துமாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர், சிறுமியிடம் விசாரித்தபோது 'டிவி பார்க்கப்போது முதியவர் கருப்பய்யா கட்டாயப்படுத்தி பாலியல் தொந்தரவு அளித்ததை தெரிவித்தார். இதையடுத்து சிறுமி கொடுத்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கருப்பய்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.