ETV Bharat / state

தொழிலதிபரை கட்டிப்போட்டு 80 பவுன் நகை கொள்ளை

author img

By

Published : Apr 13, 2021, 4:52 AM IST

விருதுநகர்: ராஜபாளையத்தில் பட்டப்பகலில் தொழிலதிபரை கட்டிப்போட்டு 80 பவுன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

80 பவுன் நகை கொள்ளை
80 பவுன் நகை கொள்ளை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பி.எஸ்.கே நகர் பகுதியில் நாராயண ராஜா- ஜமுனா தம்பதி வசித்துவருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இருவரும் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகின்றனர். உரக் கடை வைத்து வியாபாரம் செய்து இவர்கள் தனியாக இருப்பதை அறிந்த அடையாளம் தெரியாத நபர்கள் 5 பேர் வயதான தம்பதிகள் இருவரையும் கத்தியை காட்டி மிரட்டி, பீரோவில் இருந்த தங்கம், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

பிறகு தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மொத்தம் 80 பவுன் நகை, 4 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து விருதுநகரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு மோப்ப நாய் உதவியுடன் கொள்ளையில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற ’மெகா லோக் அதாலத்’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.