ETV Bharat / state

பசும்பொன் குருபூஜை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

author img

By

Published : Oct 29, 2020, 10:42 AM IST

விருதுநகர்: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 58ஆவது குருபூஜையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியைய்யா தலைமையில் காவல் துறை உயர் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

பசும்பொன் குருபூஜை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
பசும்பொன் குருபூஜை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 58ஆவது குருபூஜை விழா நாளை (அக்டோபர் 30) அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இதில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், குருபூஜையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியைய்யா தலைமையில், அருப்புக்கோட்டையில் காவல்துறை உயர் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் பசும்பொன் செல்லும் வழித்தடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு, சோதனைச் சாவடிகளில் எவ்வாறு சோதனை மேற்கொள்வது, முக்கிய தலைவர்களின் பாதுகாப்பு, அருகில் உள்ள மருத்துவமனையில் சிசிடிவி கேமரா அமைத்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டன.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உதவி காவல் கண்காணிப்பாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.