நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துவரும் நபர்களைக் காவல் துறையினர் பல்வேறு மாவட்டங்களில் கைது செய்துவருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக விருதுநகர் அருகே சின்னப்பேராலியில் விவசாய தோட்டத்தில் வைத்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்துவந்த சோனை, நாகராஜ், சுந்தரமூர்த்தி, ராஜ்குமார், ராஜசேகர் என்னும் ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
அவர்களிடமிருந்து 70,000 ரூபாய் மதிப்பிலான 176 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்த விருதுநகர் ஊரக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க... திருட வந்த வீட்டில் மது அருந்தி ஃபன் பண்ண பாய்ஸ்!