கரோனா வைரஸ் எதிரோலியால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிலே இருக்குமாறு அறிவறுத்தப்பட்டுள்ளனர். அத்தியாவசிய க் கடைகளைத் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், விருதுநகர் சாத்தூர் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி மது விற்பனை செய்வதாக சாத்தூர் நகர காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலின் பேரில், காவல் உதவி ஆய்வாளர் ராமசாமி தலைமையில் பிரதான சாலை, அண்ணா நகர், வெள்ளக்கரை சாலை, வீரபாண்டியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் அதிரடியாகச் சோதனை நடத்தினர்.
அப்போது, சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்த பரமசிவம், சரவணகுமார், செல்வம் உள்ளிட்ட 7 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிமிருந்து 1017 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல், புல்லக்கோட்டை சாலையில் உள்ள மாட்டுப் பண்ணையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதை கண்டுபிடித்த காவல் துறையினர், மணிவண்ணன் (25) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 383 மது பாட்டில்களைக் கைப்பற்றினர்.ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 8 பேரை கைது செய்து, 1400 மது பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் தாமாக முன்வர வேண்டும்' - தமிழ்நாடு அரசு வேண்டுகொள்