விருதுநகர் மாவட்டம் வள்ளியூர் ஊராட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். அதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விருதுநகர் மாவட்டத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலைக்கு விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் அரசு வேலை வழங்க வேண்டும். நூறு நாள் வேலைத் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் என கூறிய மத்திய அரசு அதற்கான அரசாணையை வெளியிடவில்லை.
சுங்க கட்டணம் வசூலிப்பதில் மட்டும் விரைவாக செயல்படும் மத்திய அரசு, நூறு நாள் வேலை திட்டத்தை செயல்படுத்துவதில் செயல்படவில்லை என்று குற்றஞ்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றம் வரை சென்று டாஸ்மாக் கடைகளை திறந்துள்ளது வருத்தம் அளிப்பதாக கூறினார்.
அதன்பின் அவர், 16 அரசு நிறுவனங்கள் தனியார் மயமாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் அணு ஆயுதத்துறை உள்ளிட்ட பாதுகாப்பு ஆயுதத்துறைகள் தனியார் மயமாக்கப்பட்டால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். எனவே, இந்தத் திட்டம் கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு உதவிய திமுக எம்.பி.!