விருதுநகர்: அருப்புக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் மணிநகரம், காந்தி மைதானம் , புளியம்பட்டி உள்ளிட்ட 10 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
டிஎஸ்பி அலுவலகம் அருகே இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் புதிய பேருந்து நிலையம் அருகே வந்தடைந்ததும், அப்பகுதி போலீசார் ஆழாக்கரிசி விநாயகர் கோயில் வரை மேளம் அடித்துச் செல்ல கூடாது எனக்கூறி மேளம் அடிப்பவர்களை ஒரு வேனில் ஏற்றி சென்றனர்.
இதனால் இந்து முன்னணியினர் திமுக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பியவாறு ஊர்வலத்தை தொடங்கினர். அதைத்தொடர்ந்து குறிப்பிட்ட இடத்தை கடந்ததும் மேளதாளங்கள் மீண்டும் தொடங்கியது. அப்போது பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சொத்து தகராறில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு...ஒருவர் பலி