தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் மலை அடிவாரத்திலுள்ள பிளவக்கல் பெரியாறு அணை, கோவிலாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பிளவக்கல் பெரியாறு அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகப்படுத்தப்பட்டுள்ளதால் அணையிலிருந்து பாசனத்திற்கு செல்லும் வாய்க்கால்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அதிக அளவு நீர் வெளியேற்றப்படுவதால் பிளவக்கல் அணையில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் பாதையிலுள்ள பட்டுப்பூச்சி என்ற இடத்தில் தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது.
தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகம் இருப்பதால் இனிவரும் காலங்களில் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகமாக இருக்கும் என்பதால் பொது மக்களை எச்சரிக்கும் வகையில் அணையை சுற்றியுள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.