ETV Bharat / state

தொடர் கனமழை - விவசாயிகள் மகிழ்ச்சி! - வடகிழக்கு பருவமழை

விருதுநகர் : விடிய விடிய கொட்டிய மழையால் விவசாய நிலங்களில் மழைநீர் சூழ்ந்து தரைப்பாலத்திற்கு மேலே மழைநீர் காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தொடர் கனமழை
தொடர் கனமழை
author img

By

Published : Nov 5, 2020, 11:40 AM IST

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளான பந்தல்குடி, கொப்புசித்தம்பட்டி, மறவர் பெருங்குடி , கானாவிளக்கு உள்ளிட்டப் பகுதிகளில் விடிய விடிய கொட்டிய மழையால் விவசாய நிலங்களில் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது.

வடகிழக்குப் பருவமழையால் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, நவம்பர் 4, 5ஆம் தேதியில் கனமழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் அருப்புக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று(நவ .4) காலை முதலே கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் இரவு நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து விடிய விடிய கன மழையை கொட்டித்தீர்த்தது.

தொடர் கனமழை

பந்தல்குடி, கொப்புசித்தம்பட்டி, மறவர் பெருங்குடி , கானாவிளக்கு உள்ளிட்டப் பகுதிகளில் பெய்த மழையால் விவசாய நிலங்களில் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் மறவர் பெருங்குடியில் இருந்து கானாவிளக்கு செல்லும் சாலையில் தரைப்பாலத்திற்கு மேலே மழைநீர் செல்கிறது. அதேசமயம் கனமழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: மதுரையில் பெட்டிக்கடையில் குட்கா விற்றவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.