ETV Bharat / state

இரண்டு அரசுப் பேருந்துகள் மீது கல்வீச்சு - குற்றவாளிகளுக்கு காவல் துறை வலை! - Govt Bus Attacking aquest police hunt

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று அதிகாலை இரண்டு அரசுப் பேருந்துகள் மீது கல் வீசித் தாக்குதல் நடத்திய அடையாளம் தெரியாத நபர்களைக் காவல் துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

govt-bus-attack-in-virudhunagar
govt-bus-attack-in-virudhunagar
author img

By

Published : Dec 3, 2019, 4:16 PM IST

இன்று அதிகாலை, மதுரையில் இருந்து அரசுப் பேருந்து ஒன்று ராஜபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சின்னக்கடை பஜார் அருகே சென்ற போது அடையாளம் தெரியாத நபர்கள், மறைந்திருந்து பேருந்து மீது சரமாரியாக கல் வீசித் தாக்கினர்.

இதில், பேருந்தின் பின்பக்கக் கண்ணாடி உடைந்தது. அதேபோல், இன்று அதிகாலையில் குமுளியிலிருந்து திருநெல்வேலி செல்லும் அரசுப் பேருந்து, இந்திராநகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்கள் பேருந்தின் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தினர்.

அதில், பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி உடைந்தது. இதனால், பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் ராஜா என்பவர் படுகாயமடைந்தார். இதைக் கண்ட பின்னால் வந்த வாகன ஓட்டிகள், காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலையடுத்து, விரைந்து வந்து ஓட்டுநர் ராஜாவை மீட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக நகரக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இரண்டு பேருந்துகள் மீது கல் வீசித் தாக்குதல் நடத்திய சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சுற்றி பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:

தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்த சொகுசுப் பேருந்து...!

Intro:விருதுநகர்
03-12-19

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று அதிகாலை 2 அரசுப் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

Tn_vnr_03_gv_bus_attack_vis_script_7204885Body:விருதுநகர்
03-12-19

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று அதிகாலை 2 அரசுப் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

மதுரையில் இருந்து அரசு பேருந்து இன்று அதிகாலையில் ராஜபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்தப் பேருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சின்னக்கடை பஜார் அருகே வந்த போது மறைந்திருந்த மர்மநபர்கள் பஸ் மீது சரமாரியாக கற்களை வீசினர் இந்த கல்வீச்சுத் தாக்குதலில் பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைந்தது.
இதேபோல் குமுளியிலிருந்து திருநெல்வேலி செல்லும் அரசு பேருந்து இன்று அதிகாலையில் இந்திராநகர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது மர்மநபர்கள் பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர் இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.
பேருந்தை தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த ராஜா என்பவர் ஓட்டி வந்தார் கல்வீச்சு சம்பவத்தில் பேருந்து ஓட்டுனர் ராஜாவிற்கு காயம் ஏற்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார் இது தொடர்பாக நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடபட்டுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.