ETV Bharat / state

12 ஆயிரம் பனை விதைகள் நடவு - அசத்திய அரசுப்பள்ளி மாணவர்கள்!

author img

By

Published : Oct 22, 2019, 12:58 PM IST

விருதுநகா்: சாத்தூா் அருகேயுள்ள விஜயகரிசல்குளத்தில் 12 ஆயிரம் பனை விதைகளை நடவு செய்து அரசுப் பள்ளி மாணவர்கள் அசத்தியுள்ளனர்.

virudhunagar

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள விஜயகரிசல்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனா். விஜயகரிசல்குளம் பகுதி மக்களுக்கு நீராதாரமாக விளங்கும் பாண்டி கண்மாய் நீண்ட வருடங்களுக்குப் பிறகு சமீபத்தில் குடிமராமரத்துப் பணிகள் மூலம் புனரமைக்கப்பட்டது.

அதனை சிறப்பிக்கும் விதமாக அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் 12 ஆயிரம் பனை விதை நடவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 100க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு கண்மாயின் இருபக்களிலும் பனை விதைகளை நடவு செய்தனர்.

12 ஆயிரம் பனை விதைகள் நடவு

இதில் பனை மரத்தின் சிறப்பு குறித்து பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். மாணவ, மாணவிகளின் இந்த முயற்சியை அப்பகுதிமக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: பனை விதைப்போம் அமைப்பின் சார்பில் 15 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி

Intro:விருதுநகர்
22-10-19

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 12 ஆயிரம் பனை விதைகளை நடவு செய்து அசத்திய அரசு பள்ளி மாண மாணவிகள்

Tn_vnr_02_school_students_palm_tree_vis_script_7204885Body:விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே விஜயகரிசல்குளம் கிராமத்தில் சுமார் 1500க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தினர் விவசாயம் மற்றும் பட்டாசு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1000க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனா். மேலும் சமீபத்தில் முதலமைச்சரின் குடிமராமரத்து பணிகள் மூலம் விஜயகரிசல்குளம் பகுதியில் உள்ள பாண்டி கண்மாய் புனரமைக்கப்பட்டது. மேலும் இந்த பாண்டி கண்மாய் தான் இந்த பகுதியில் உள்ள விவசாயம் மற்றும் குடிநீருக்கு ஆதாரமாக உள்ளது. இந்த நிலையில் பாண்டி கண்மாய் கரையின் இரு பக்கங்களிலும் அரசு பள்ளி மாணவ,மாணவிகள் சுமார் 100க்கு மேற்பட்டவா்கள் இன்று 12 ஆயிரம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் மற்றும் அந்த பகுதி இளைஞா்கள் ஆா்வமாக கலந்து கொண்டு பனை விதைகளை நடவு செய்தனா். மேலும் பனை விதை நடுவதின் அவசியம் குறித்து பள்ளி ஆசிரியா்கள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் பள்ளி மாணவ,மாணவிகள் மற்றும் இளைஞர்களின் முயற்ச்சியை கிராமத்தினர் வெகுவாக பராட்டினார்கள். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.