விருதுநகர் மாவட்டத்தில் பிரசித்திபெற்ற, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம் வரும் 24-ஆம் தேதி நடைபெற இருந்தது. இந்நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக, கோயில் வளாகத்திற்குள்ளேயே தங்கத் தேரை இழுக்க தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி அனுமதி வழங்கினார். மேலும் பக்தர்கள் இன்றி 9 நாட்கள் திருவிழாவை அர்ச்சகர் மட்டும் நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தேரோட்டத்தை முன்னிட்டு, நாளை (ஜூலை 16) காலை கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. எனவே, தேரோட்டக் காட்சிகள் யூ-ட்யூப் தளத்தில் வெளியிடப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: சுயஉதவிக் குழுக்களைக் கட்டாயப்படுத்தும் கடன் நிறுவனங்கள்: ரிசர்வ் வங்கி பதிலளிக்க உத்தரவு!