விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள நியூ காலனி தெருவில் சுமார் 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் சமீபத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள காலி இடத்தில் நகராட்சி நிர்வாகம் குப்பைக் கிடங்கு கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
குடியிருப்பு பகுதிகளுக்கு நடுவே குப்பைக் கிடங்கு கொண்டுவரப்பட்டு அதில் குப்பைகளை சுத்தப்படுத்தி தரம்பிரித்து ஏற்றுமதி செய்யப்படும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்று தெரியவந்தது.
இதனையடுத்து இந்த பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் கூறுகையில், ”குப்பைக் கிடங்கு இந்தப்பகுதியில் இருக்குமேயானால் குப்பை லாரிகள் அதிகப்படியாக வந்து செல்லும்போது லாரியில் உள்ள குப்பைகள் வீட்டு பகுதிக்குள் பறந்து வரும், மேலும் குப்பைகளை சுத்தப்படுத்தும் கழிவு நீரானது தெருவிற்குள் தேங்கிக்கிடக்கும். மேலும் குப்பைகள் தரம் பிரித்து தேக்கி வைக்கப்படும் பொழுது அந்தப் பகுதி முழுவதுமே துர்நாற்றம் வீசும்.
இதனால் இந்தப் பகுதியில் நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மேலும் இங்குள்ள குழந்தைகளுக்கு அதிகபாதிப்புகள் ஏற்படும்” என்ற அச்சத்தில் இப்பகுதி மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு இடையே குப்பைக்கிடங்கு வேண்டாம் என்று நகராட்சி நிர்வாகம் கொண்டுவந்த இந்த திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதையும் படிக்க: ''நம்ம கேண்டீன்'' ஹோட்டல் தொழிலில் கால்பதித்த பழங்குடி மக்கள்!