விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஆண்டுதோறும் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றத்தின் சார்பில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பிரமாண்டமான விநாயகர் சிலை செய்வதுண்டு.
இந்நிலையில், இந்த ஆண்டு கரோனா தொற்று பரவலினால் ஏற்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மாதம் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட தமிழ்நாடு அரசானது தடை உத்தரவு விதித்திருத்தது. இருப்பினும் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், விநாயகர் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கக் கோரி வழக்கு தொடுத்த நிலையில், கரோனா காரணமாக நீதிபதிகள் அனுமதிக்க மறுத்து, மனுவை தள்ளுபடி செய்தனர்.
தற்போது கரோனா தாக்கம் குறைந்ததால் தமிழ்நாடு அரசானது பேருந்து, வழிபாட்டுத் தலங்கள் போன்றவை செயல்பட உத்தரவிட்ட நிலையில், விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி வழங்குமாறு மீண்டும் உயர்நீதி மன்ற மதுரைக் கிளையை, மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றத்தினர் நாடினர். மேலும் நீதிமன்றம், அரசு விதிமுறைப்படி ஒத்துழைப்பு கொடுத்து விநாயகர் சிலை கரைக்க அனுமதி வழங்கியது.
இதைத் தொடர்ந்து மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றத்தினர் வடிவமைத்த விநாயகர் சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக எடுத்து சென்று புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள கண்மாயில் கரைக்க கொண்டுச் செல்லப்பட்டது. இந்த ஊர்வலத்திற்கு நூற்றுக்கு மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதையும் படிங்க: முழுவதும் பதியம் எடுத்து நூலாக மாறும் மீனாட்சி கோயில் கல்வெட்டுக்கள்