விருதுநகரைச் சேர்ந்த பாண்டி பிரபு - ஜெயபாரதி தம்பதியினரின் மகள் ஹாசினி (4). யுகேஜி படித்துவரும் ஹாசினி கடந்த ஓராண்டாக யோகாசனம் கற்றுவருகிறார்.
யோகாசனத்தில் எப்படியாவது சாதனை படைக்க வேண்டும் என்ற ஆர்வத்திலிருந்த சிறுமிக்குப் பெற்றோர், பயிற்சியாளர் உறுதுணையாக உள்ளனர்.
இந்நிலையில் ஹரினி சமகோனாசனம் (இருபுறமும் முட்டைகள் மீது கால்கள் வைத்தவாறு நிற்க வேண்டும்) என்ற யோகாசனத்தைச் செய்து அசத்தியிருக்கிறார். இந்த யோகாசனத்தை 31 நிமிடம் 23 நொடிகள் செய்து ஹாசினி உலக சாதனை படைத்துள்ளார்.
நோபிள் வேர்ல்டு ரிகார்ட்ஸ் சென்னை நிர்வாக இயக்குநர் அரவிந்த், திருஞானராமன் சாதனைப் படைத்த குழந்தைக்குச் சான்றிதழையும், பரிசுகளையும் வழங்கினார். முன்னதாக இதே சாதனையைத் தஞ்சாவூரைச் சேர்ந்த நான்கு வயது ஆண் குழந்தை 25 நிமிடம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரூபிக் கியூப் விளையாட்டில் 5 வயது சிறுமி கின்னஸ் சாதனை