தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
தற்போது நாடு முழுவதிலுமிருந்து அவரவர் சொந்த ஊர்களுக்குப் பொதுமக்கள் சிறப்பு ரயில் மூலம் அனுப்பிவைக்கப்படுகின்றனர். இந்தச் சூழலில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
தற்போது விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மூன்று பேருக்கும் ஆலங்குளம் பகுதியில் ஒருவருக்கும் கரோனோ உறுதிசெய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 127 பேருக்கு கரோனோ பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது சென்னையிலிருந்து விருதுநகருக்கு வந்துள்ள மேலும் நான்கு பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டதால் அவர்கள் வசித்துவந்த பகுதி முழுவதும் சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டுவருகிறது.
தற்போது விருதுநகர் மாவட்டத்தில் கரோனா பாதித்த நபர்களின் எண்ணிக்கை 131ஆக அதிகரித்துள்ளது.
விருதுநகரில் மேலும் நான்கு பேருக்கு கரோனா! - விருதுநகர் செய்திகள்
விருதுநகர்: கரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் மேலும் நான்கு பேருக்கு கோவிட்-19 உறுதிசெய்யப்பட்டுள்ளது.
![விருதுநகரில் மேலும் நான்கு பேருக்கு கரோனா! கரோனா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-corona-0306newsroom-1591181220-504.jpg?imwidth=3840)