ETV Bharat / state

ஈ.பி.எஸ் ஆட்சியை வேண்டாம் என்றவர்கள் தற்போது யூ.பி.எஸ்-ஐ தேடுகிறார்கள்!" - ராஜேந்திர பாலாஜி - சிவகாசியில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற வரும் மே தின பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேச்சு.

ஈ.பி.எஸ்.ஆட்சியை வேண்டாம் என்றவர்கள், தற்போது யூ.பி.எஸ்-ஸை தேடுகிறார்கள்" என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

இ.பி.எஸ் ஆட்சியை வேண்டாமென்றவர்கள் தற்போது யூ.பி.எஸ்-ஐ தேடுகிறார்கள்!" - ராஜேந்திர பாலாஜி

author img

By

Published : May 3, 2022, 11:03 AM IST

Updated : May 3, 2022, 2:50 PM IST

விருதுநகர்: சிவகாசியில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற மே தின பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பங்கேற்று பேசினார்.

"தேனிக்கு வந்த தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் மின்சாரத்தை காணவில்லை என மக்கள் புகார் அளித்துள்ளார்கள். அதிமுக ஆட்சியில் மின் கம்பியில் அனில் நின்றது ஆனால் கரண்ட் கட் ஆகவில்லை, திமுக ஆட்சியில் மட்டும் மின் கம்பியில் அனில் நின்றால் மின்சாரம் தடைபடுகிறது மக்கள் புலம்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது மின்சாரம் துண்டிப்பு திமுக ஆட்சிக்கு அவமானம்.

இ.பி.எஸ் ஆட்சியை வேண்டாமென்றவர்கள் தற்போது யூ.பி.எஸ்-ஐ தேடுகிறார்கள்!
இ.பி.எஸ் ஆட்சியை வேண்டாமென்றவர்கள் தற்போது யூ.பி.எஸ்-ஐ தேடுகிறார்கள்!" - ராஜேந்திர பாலாஜி

ஈ.பி.எஸ் ஆட்சியை வேண்டாம் என்ற மக்கள். தற்பொழுது யூ.பி.எஸ்-ஸை தேடுகிறார்கள் அதிமுகவின் அனைத்து திட்டங்களை நிறுத்திய திமுக அரசு புதிய திட்டங்களை கொண்டு வரவில்லை. வாக்களித்த மக்கள் வேதனையில் உள்ளார்கள். திமுக எதற்கு எடுத்தாலும் கவர்னரை குற்றம் சொல்லி வருகிறார்கள் கவர்னர் அதிகாரத்தில் யாரும் தலையிட கூடாது. கவர்னரை குற்றம்சாட்டிவிட்டு புகார் மனுவை அவரிடமே கொடுக்கிறார்கள். ஒன்றிய அரசு என சொல்லும் முதல்வர் ஒவ்வொரு மத்திய அமைச்சர்களிடம் உதவி கேட்கிறார்.

முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழகத்திற்குள் ஒரு பேச்சு, டெல்லியில் சென்று ஒரு பேச்சும் பேசுகிறார். திமுகவிற்கு வாக்கு வங்கியே கிடையாது அதிமுகவில் பிளவு ஏற்படும்போது மட்டுமே ஆட்சிக்கு வரும் கட்சி தான் திமுக. பட்டாசு தொழிலை திமுக அரசு பாதுகாக்க தவறுகிறது. பட்டாசு விபத்து ஏற்பட்டால் பட்டாசு ஆலை உரிமையாளரை கைது செய்யும் நடவடிக்கை கூடாது. பட்டாசு விபத்து ஏற்பட்டால் ஆலை உரிமையாளர்களிடம் பேரம் பேசுகிறார்கள்.

சிவகாசியில் 80 பட்டாசு ஆலைகள் இயங்காமல் உள்ளது ஆனால் சீனா பட்டாசு இறக்குமதியை ஊக்குவிக்க மறைமுகமாக முயற்சி நடைபெற்று வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு, கைத்தறி, பருப்பு கொள்முதல், நூற்பாலை, அச்சகம் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளது. இதனை திமுக அரசு கண்டுகொள்வதில்லை.

திமுக ஆட்சியில் 110 விதியில் மக்களுக்கான திட்டங்கள் இதுவரை அறிவிக்கவில்லை. மானிய கோரிக்கைகளிலும் எந்த திட்டங்களும் அறிவிப்பதில்லை. தமிழகத்தின் நிலவரம் கலவரமாக உள்ளது. ஆட்சி நல்லது செய்வதாக யாரும் சொல்வதில்லை திமுக ஆட்சியை மக்கள் விரும்பவில்லை. தமிழகத்தில் அதிமுக ஆட்சி விரைவில் மலரும். வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும்" என ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் ஒரேநாளில் 17,370 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது - அமைச்சர் செந்தில் பாலாஜி ட்வீட்

Last Updated : May 3, 2022, 2:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.