விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அய்யனார் கோயில் செல்லும் சாலையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கரோனா நோயாளிகள் உபயோகித்த பாதுகாப்பு கவச உடைகள், உணவுப் பொட்டலங்களின் கழிவுகள் உள்ளிட்டவை கரோனா வார்டுகள் அருகில் குவியல் குவியலாக கொட்டப்பட்டுள்ளன.
இந்தக் கழிவுகளை சரியான முறையில் சேமித்து வைக்காமல் அப்படியே கொட்டப்படுவதால், நாய்கள் அதனை இழுத்துச் செல்கின்றன. இதனால் அப்பகுதியை கடந்துச் செல்லும் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். மேலும், சுகாதாரச் சீர்கேட்டை கண்டுகொள்ளாமல் இருக்கும் மாவட்ட அலுவலர்கள் மீது அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா வார்டுகள் அருகில் கொட்டப்படும் கழிவுகள் - நோய்த்தொற்று பரவும் அபாயம்