விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே குண்டாறு, தெற்காறு என இரண்டு ஆறுகள் உள்ளன. இங்கு தொடர்ந்து மணல் திருட்டு நடைபெறுவதாக வந்த புகாரை தொடர்ந்து மாவட்ட கண்காணிப்பாளர் ராஜராஜன் உத்தரவில் தனிப்படை அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் காரியாபட்டி தனிப்படை துணை ஆய்வாளர் வினோத் தலைமையில் கண்காணிப்பில் ஈடுபட்ட போது, அசம்பட்டியைச் சார்ந்த நல்லுச்சாமி, முத்துப்பாண்டி, கருப்பசாமி, வீரணன் மற்றும் தோப்பூரைச் சார்ந்த பிரபாகரன் உட்பட 5 பேர் இருசக்கர வாகனம் மூலம் மணல் திருடிய போது பிடிபட்டனர்.
இவர்களிடமிருந்து 5 இருசக்கர வாகனங்கள், 35 மணல் மூட்டைகள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, அவர்களை கைது செய்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.