விருதுநகர்: சிவகாசி அருகில் உள்ள பூசாரித்தேவன்பட்டியில் செல்வம் என்பவருக்குச் சொந்தமான காலிமனையில் எம்.புதுப்பட்டியைச்சேர்ந்த திருப்பதி என்பவர், வாடகைக்கு நிலத்தைப்பெற்று, அதில் செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் அரசால் தடை செய்யப்பட்ட பெர்க் குளோரைடு என்னும் வேதிப்பொருள் கொண்டு பட்டாசுத்தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில், அங்கு பட்டாசுத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த உரிமையாளர் ஆன திருப்பதி மற்றும் அவரது உறவினரான நாகராஜ் (19) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து M. புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவால் உயிரிழந்த மாணவன்... ரூ.7.60 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு...