ETV Bharat / state

தனியார் செல்போன் கோபுரத்தில் தீ விபத்து - Virudhunagar Cell Phone Tower

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் தனியார் செல்போன் கோபுரம் திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

செல்போன் கோபுரம் திடீரென தீப்பிடித்து விபத்து

author img

By

Published : Mar 25, 2020, 9:17 PM IST

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் தனியார் திருமண மண்டபத்தின் மேல் ஒப்பந்த அடிப்படையில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை செல்போன் கோபுரத்திலிருந்து புகை கிளம்பிய நிலையில் திடீரென மளமளவென தீ பற்றி எரிந்தது.

செல்போன் கோபுரம் தீ பற்றி எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக அருப்புக்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், செல்போன் டவரில் பற்றிய தீயை அணைத்தனர். இதில் செல்போன் டவர் முற்றிலுமாக எரிந்தது.

செல்போன் கோபுரம் திடீரென தீப்பிடித்து விபத்து

தீ விபத்து காரணமாக அந்த இடம் முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது.‌ உடனடியாக தீ கட்டுக்குள் கொண்டு‌ வரப்பட்டதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.‌

இதையும் படிங்க: மின்கசிவால் தீ விபத்து: தரைமட்டமான குடிசை வீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.