விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள என்.சுப்பையாபுரம் விலக்கு தேசிய நெடுஞ்சாலையில் தனியாருக்குச் சொந்தமான கார்பன் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இங்கு மினரல் வாட்டர் தயாரிப்பதற்கு தேவையான கார்பன் ஃபில்டர் எனப்படும் வேதிப் பொருள் தயாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த தொழிற்சாலையில் நேற்று (மே 22) திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள கார்பன் பொருட்கள் தீயில் எரிந்து கருகின. விபத்தில் ஏற்பட்ட கரும்புகை அந்தப் பகுதி முழுவதும் சூழ்ந்தது.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த சாத்தூர் தீயணைப்பு துறையினர், நீண்ட போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். விபத்தின்போது பணியாட்கள் அதிகம் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து சாத்தூர் வட்டார காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: புகை மண்டலமான பிரிட்டன் தொழிற்சாலை