விருதுநகர்: தேசபந்து மைதானம் அருகே பழைய மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு காய்கறி, இறைச்சி, பலசரக்கு என பலதரப்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இங்குள்ள விஜயா என்பவரது காய்கறி கடை, ராஜா என்பவரது கருவாட்டு கடை ஆகியவற்றிலிருந்து நேற்று (ஆக.11) காலை திடீரென புகை வெளியேறியுள்ளது. இதைப் பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் உடனே விருதுநகர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்புத் துறையினர், துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இந்தத் தீ விபத்தில் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாகியுள்ளன.
மின்கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து விருதுநகர் மேற்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: துறைமுக முதலீட்டில் மோசடி - 9 பேர் கைது