ETV Bharat / state

காட்டுயானைகள் விளை நிலத்திற்குள் புகுந்து அட்டகாசம்: விவசாயிகள் கவலை - யானைகள்

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விளை நிலத்திற்குள் புகுந்து காட்டு யானைகள் வாழை, தென்னை மரங்களைச் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

விளை நிலங்களுக்குள் புகுந்த யானை
விளை நிலங்களுக்குள் புகுந்த யானை
author img

By

Published : Feb 11, 2021, 1:17 PM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் யானை, கரடி, மான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்துவருகின்றன.

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் பிரதானமாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை, மா, வாழை விவசாயமே பிரதானமாக நடைபெற்றுவருகிறது. பிளவக்கல் அணைப் பகுதியில் இறங்கும் காட்டு யானைகள் தொடர்ந்து விவசாய தோட்டங்களில் நுழைந்து மரங்களைச் சேதப்படுத்திவருகின்றன.

இந்நிலையில் பிளவக்கல் அணைப் பகுதியில் ஜெயக்கொடி, சுந்தரம் ஆகியோர் 3 ஏக்கரில் வாழை விவசாயம் செய்துவருகின்றனர். இவர்களது விளை நிலத்திற்குள் புகுந்த காட்டுயானைகள் ஏராளமான வாழை, தென்னை மரங்களை சேதப்படுத்தியுள்ளது.

விளை நிலத்திற்குள் புகுந்த யானை

இதனால் கவலையடைந்த விவசாயிகள், இதுபோன்று அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டவும் வனத் துறையினர், அரசு அலுவலர்கள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ஓவர் சேட்டையுடன் டிமிக்கி கொடுக்கும் சங்கர்... தீவிரமாக தேடும் வனத்துறை..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.