ETV Bharat / state

கொலை மிரட்டல் விடுத்த திமுக எம்பி - ஆட்சியர் வாகனத்தின் முன் விவசாயி தற்கொலை முயற்சி - திமுக எம்பி

விருதுநகரில் தனது விவசாய நிலத்தை திமுக எம்பி அபகரிக்க முயல்வதாக கூறி மாவட்ட ஆட்சியரின் காரின் முன்பு விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துயுள்ளது.

ஆட்சியர் வாகனத்தின் மீது தற்கொலைக்கு முயன்ற விவசாயி

author img

By

Published : Nov 22, 2021, 9:31 PM IST

விருதுநகர்: ராஜபாளையம் அருகேவுள்ள தேவதானம் சாஸ்தா கோயில் நீர்தேக்கம் அணையானது பருவமழை காரணமாக முழு கொள்ளவை எட்டியது. இந்நிலையில், இன்று (நவ.22) விவசாய பயன்பாட்டிற்க்காக அனையில் இருந்து நீர் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி, ராஜபாளையம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் தங்கபாண்டியன், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதையடுத்து நிகழ்ச்சிகள் முடிந்து மாவட்ட ஆட்சியர் திரும்பும் போது, தேவதானம் பகுதியைச் சேர்ந்த கணேஷ்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் சேர்ந்து ஆட்சியரின் காரின் முன்பு தற்கொலைக்கு முயன்றனர்.

இதனைக் கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர், கணேஷ்குமாரின் கையில் இருந்த மண்ணெண்ணெய் கேனை தள்ளிவிட்டு அவரை பிடித்தனர்.

கொலை மிரட்டல் விடுத்த திமுக எம்பி

பின்னர், காவல் துறையினரிடம் வாக்குவாதம் செய்த நிலையில் அவரை மாவட்ட ஆட்சியர் சந்தித்து விசாரித்தார். அப்போது, தனக்குச் சொந்தமான இரண்டரை ஏக்கர் விவசாய நிலத்தை ஒட்டி தென்காசி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம். குமார் நிலம் உள்ளது.

தனது நிலத்தினை திமுக எம்பி ஆக்கிரமிப்பு செய்து வருவதாகவும், இதனால் விவசாய நிலத்திற்குச் செல்லும் பாதை இல்லாமல் போனதாகவும் தெரிவித்தார். ஒரு கட்டத்தில் தனது 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான இரண்டரை ஏக்கர் விவசாய நில சொத்தினை தன் பெயருக்கு மாற்றி எழுதி கொடு என கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்தார்.

ஆட்சியரின் அறிவுரை

மேலும் தான் பார்த்து வந்த நீர் தேக்க அணை காவலாளி பணியையும் துஷ்பிரயோகம் செய்து சஸ்பெண்ட் செய்ய வைத்துள்ளதாகவும் கூறினார். எனவே இதற்கு ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவே தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததாக தெரிவித்தார்.

ஆட்சியர் வாகனத்தின் மீது தற்கொலைக்கு முயன்ற விவசாயி

விவசாய நிலத்தினை அளக்க சர்வேயரிடம் இரண்டு முறை மனு கொடுத்தும் நேரில் வரவில்லை எனக் குற்றஞ்சாட்டினார். இதனைக் கேட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி, இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், மீண்டும் இது போன்று தற்கொலை முயற்சியில் ஈடுபடக் கூடாது எனவும் ஆலோசனை வழங்கி அங்கிருந்து சென்றார்.

இதையும் படிங்க: மணப்பாறையில் பணமோசடி: பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.